தொலைக்காட்சியில் தொகுப்பாளனியாக அறிமுகமாகி தற்போது தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டு இருப்பவர் நடிகை அனுசுயா. இவர் அல்லு அர்ஜுன் நடித்த ‘புஷ்பா’ என்ற படத்தில் வில்லியாக நடித்த நிலையில் அந்த படத்தின் இரண்டாம் பாகத்திலும் தற்போது நடித்து வருகிறார்.
இந்நிலையில் தனது புகைப்படத்தை ஆபாசமாக மார்பிங் செய்து இணையத்தில் வெளியிடுபவர் மீது நடவடிக்கை எடுக்கும்படி அனுசுயா ஆந்திர மாநில சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரனை நடத்தி ஆந்திரா மாநிலம் பசலபுடி கிராமத்தை சேர்ந்த ராம வெங்கடராஜு என்பவரை கைது செய்தனர்.இவர்தான் அனுசுயாவின் ஆபாச மார்பிங் புகைப்படங்களை வெளியிட்டு வந்தவர் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.