தென்னிந்திய திரையுலகில் பாடகி ,நடிகை என பன்முகத்திறன் கொண்ட நடிகையாக வலம் வருகின்றார் ஆண்ட்ரியா.அழுத்தமான காதாபாத்திரங்களில் நடித்து சினிமா துறையில் தனக்கென தனி இடத்தை பிடித்துள்ளார் ஆண்ட்ரியா.
மேலும் இவர் நடிக்கும் படம் என்றால் நம்பி பார்க்கலாம் என்ற எண்ணத்தை ரசிங்கர்களின் மனதில் விதைத்துள்ளார்.இந்நிலையில் நடிகை ஆண்ட்ரியா நடிப்பில் அனல் மேல் பனித்துளி என்ற திரைப்படம் வெளியாகவுள்ளது.நகருக்கு வரும் பெண்கள் பொதுவெளிக்கு வரும் போது சந்திக்கும் பிரச்சனைகள் தான் இப்படக்கதை.

11 வயது இருக்கும் போது நான் வேளாங்கண்ணிக்கு பேருந்தில் சென்றேன். அப்போது எனது பின்னாடி இருந்த ஒருவன் எனது சட்டைக்குள் கை நுழைக்க முயற்சி செய்தான். பின் எழுந்து முன்பு உட்கார்ந்து கொண்டேன், கல்லூரியிலும் இதுபோல் நடந்தது என்றார் ஆண்ட்ரியா.