பெங்காலி மொழியில் நடிகையாக திகழ்பவர் ஆண்ட்ரிலா சர்மா. 24 வயதான அவர் கடந்த 20 நாட்களாக ஹவுராவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் நேற்று மதியம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். அவரின் மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். நடிகை ஆண்ட்ரிலா சர்மா கடந்த நவம்பர் 1 ஆம் தேதி கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு மூளைக்குள் இரத்தக்கசிவு இருப்பதைக் கண்டறிந்தனர், இதன் காரணமாக பக்கவாதம் ஏற்பட்டு அவரது உடலின் ஒரு பக்கம் செயலிழந்து கோமா நிலைக்கு சென்றார்.

இதையடுத்து அவருக்கு வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. நடிகை ஆண்ட்ரிலா சர்மா ஏற்கனவே இரண்டு முறை புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டு அதிலிருந்து மீண்டு வந்தவர் ஆவார்.இந்நிலையில் 24 வயதில் நடிகை ஆண்ட்ரிலா சர்மா, மரணமடைந்தது திரையுலகினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.