Skygain News

நடிகை காயத்ரி ரகுராம் பாஜகவில் இருந்து நீக்கம் – அண்ணாமலை அதிரடி அறிவிப்பு

நடிகையும் பாஜக நிர்வாகியுமான காயத்ரி ரகுராம் கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்படுவதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார் .

இது தொடர்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: தமிழக பாரதிய ஜனதா கட்சியின் வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் மாநில தலைவர் திருமதி. காயத்ரி ரகுராம் அவர்கள் கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருவதால் கட்சியில் அவர் வகித்து வரும் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் ஆறு மாத காலத்திற்கு நீக்கப்படுகிறார். ஆகவே கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அவர்களிடம் கட்சி சார்பாக எவ்வித தொடர்பும் வைத்துக் கொள்ள வேண்டாம் அறிவுறுத்தப்படுகிறது. இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், கட்சியின் இந்த முடிவை ஏற்றுக்கொள்வதாக நடிகை காயத்ரி ரகுராம் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள காய்த்ரி ரகுராம், இந்த முடிவை நான் ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் என்னை நேசிப்பவர்கள் என்னிடம் பேசுவார்கள். அதை யாராலும் தடுக்க முடியாது. இடைநீக்கத்துடன் தேசத்திற்காக உழைப்பேன். இவ்வாறு குறிப்ப்ட்டுள்ளார்.

Share this post with your friends

Leave a Comment

Your email address will not be published.