தமிழ் திரை உலகின் முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவரான லிப்ரா ப்ரொடக்ஷன்ஸ் ரவீந்தர் சந்திரசேகரன் மற்றும் பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளரும் நடிகையுமான மகாலட்சுமி சங்கர் ஆகியோரின் திருமணம் இன்று நடைபெற்றது.சன் மியூசிக் ஆரம்பிக்கப்பட்ட காலகட்டத்தில் அதில் பிரபலமான தொகுப்பாளினியாக வலம் வந்தவர் தான் மகாலட்சுமி.
சென்னையில் பிறந்து வளர்ந்த இவர் கல்லூரி படிப்பை முடித்துவிட்ட பின் ஊடகத்தில் கொண்ட ஆர்வத்தால் சன் ம்யூசிக்கில் தொகுப்பாளினியாக பணியாற்ற துவங்கினார். இவர் தொகுத்து வழங்குவது பலருக்கும் பிடித்து போகவே இவருக்கேனே தனி ரசிகர்கள் கூட்டம் உருவாகியது. குறிப்பாக இளைஞர்கள் மத்தயில் மிகவும் பிரபலமானவராக திகழ்ந்தார் மகாலட்சுமி.சன் மியூசிக் நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாக பிரபலமான மகாலட்சுமி அடுத்ததாக சீரியல்களில் நடிக்க துவங்கினார்.
சன் டிவியில் பிரபலமான ராதிகாவின் அரசி சீரியலின் மூலம் டிவி தொடர்களில் அறிமுகமானார் மகாலட்சுமி. அவரின் நடிப்பும், தோற்றமும் ரசிகர்களை வெகுவாக ஈர்க்க தொடர்ந்து பல சீரியல்களில் நடித்தார். நாயகி, வில்லி என எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் சிறப்பாக நடிக்கக்கூடியவர் மகாலட்சுமி.
அதன் காரணமாகவே இவருக்கு பல சீரியல் வாய்ப்புகள் இன்றளவும் குவிந்து வருகின்றன.இந்நிலையில் தற்போது பிரபல தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரை திருமணம் செய்துகொண்டார். இவர் தமிழில் வெளியான முருங்கைக்காய் சிப்ஸ், கல்யாணம் போன்ற சில படங்களை தயாரித்தும், சில படங்களில் நடித்தும் இருக்கின்றார். தயாரிப்பையும் தாண்டி விநியோகஸ்தராகவும் வலம் வருகின்றார் ரவீந்தர்.
இந்நிலையில் திடீரென இவர்கள் இருவரும் திருப்பதியில் இன்று திருமணம் செய்து கொண்டனர்.இந்நிலையில் ரவிந்தருக்கும் இது இரண்டாவது திருமணம் என்பது குறிப்பிடத்தக்கது.