Skygain News

திருமணத்திற்கு முன்பே கர்ப்பமா ? பிரபல பாலிவுட் நடிகை விளாசல்..!

பாலிவுட்டில் முன்னணி கவர்ச்சி நடிகையாக வலம் வருபவர் மலைக்கா அரோரா. இவர், மணிரத்னம் இயக்கத்தில் வெளியான உயிரே படத்தில் இடம்பெறும் தையா தையா பாடலில் ரயிலின் மீது ஷாருக்கானுடன் கவர்ச்சி நடனம் ஆடியதன் மூலம் பிரபலமானவர் ஆவார்.இவர் தயாரிப்பாளர் போனி கபூரின் மகனும், நடிகருமான அர்ஜுன் கபூர் மீது காதல் வயப்பட்ட மலைக்கா அரோரா, தற்போது அவருடன் லிவ்விங் டுகெதர் முறையில் வாழ்ந்து வருகிறார்.

அர்ஜுன் கபூரை விட மலைகா 12 வயது மூத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. வயதை பொருட்படுத்தாமல் காதலித்து வரும் இந்த ஜோடி விரைவில் திருமணம் செய்துகொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், நடிகை மலைக்கா அரோரா கர்ப்பமாக இருப்பதாக பாலிவுட் வட்டாரத்தில் ஒரு தகவல் காட்டுத்தீ போல் பரவியது. அர்ஜுன் கபூரை திருமணம் செய்யும் முன்பே கர்ப்பமா என்று பலரும் கேள்வி எழுப்பி ட்ரோல் செய்து வந்தனர்.

இதையடுத்து கடுப்பான மலைக்கா அரோரா, தான் கர்ப்பமாக இருப்பதாக பரவிய செய்தி உண்மையில்லை என கூறியதோடு, இதுபோன்ற செய்திகளை பரப்பியவர்களை கடுமையாக சாடி இருந்தார். அர்ஜுன் கபூரும் இதுகுறித்து தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருந்தார்.

Share this post with your friends

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

என்னையும் அட்ஜஸ்ட்மெண்ட் பண்ண சொன்னாங்க! பிரபல நடிகரின் மகள் பேட்டி…

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற வரலட்சுமி சரத்குமார், திரைத்துறையில் நடிகைகளுக்கு கொடுக்கப்படும் பாலியல்...

Read More