தமிழில் சரத்குமார் நடிப்பில் கடந்த 2004 ஆம் ஆண்டு வெளியான ஐயா என்ற படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார் நயன்தாரா. கடந்த 17 ஆண்டுகளாக திரைத்துறையில் நடித்து வரும் நயன்தாரா லேடி சூப்பர்ஸ்டார் என்ற அந்தஸ்துடன் வெற்றிகரமாக வலம் வருகின்றார்.
நாயகியாக மட்டுமல்லாமல் சோலா ஹீரோயினாகவும் பல படங்களில் நடித்து வரும் நயன்தாரா சமீபத்தில் தனது காதலரான இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்துகொண்டார். அதன் பின்பும் பிசியாக பல படங்களில் நடித்து வருகின்றார் நயன்தாரா. இந்நிலையில் நயன்தாரா தற்போது அட்லீ இயக்கும் பாலிவுட் படமான ஜவான் படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடித்து வருகின்றார்.
அதைத்தொடர்ந்து ப்ரேமம் படத்தை இயக்கிய அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் கோல்ட் என்ற படத்தில் நடித்து வருகின்றார் நயன்தாரா. இந்நிலையில் அப்படத்தின் ரிலீஸ் தள்ளிப்போவதாக அல்போன்ஸ் புத்திரன் தெரிவித்துள்ளார்.
அவர் கூறியதாவது, எங்கள் பக்கத்தில் இருந்து வேலை தாமதமாவதால் கோல்டு படம் ஓணம் பண்டிகையில் இருந்து ஒரு வாரம் கழித்து தான் ரிலீஸாகும். தாமதத்திற்காக தயவு செய்து எங்களை மன்னிக்கவும். படம் ரிலீஸாகும் போது இந்த தாமதத்தை மறப்பீர்கள் என்று நம்புகிறோம் என்றார்.
இதைதொடர்ந்து நயன்தாரா ரசிகர்கள், ஓணம் பண்டிகை அன்று தலைவி நயன்தாராவை பார்க்கலாம் என்று நினைத்தால் இப்படி ஏமாற்றிவிட்டீர்களே என தங்கள் கவலையை தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது