தமிழ் சினிமாவில் லேடி சூப்பர்ஸ்டார் என அனைவராலும் அன்போடு அழைக்கப்படுபவர் நயன்தாரா. ஹரி இயக்கத்தில் சரத்குமார் நடிப்பில் வெளியான ஐயா படத்தின் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமான நயன்தாரா தற்போது தென்னிந்தியாவில் முன்னணி நடிகையாக வலம் வருகின்றார்.
தற்போது நாயகியாக மட்டும் நடிக்காமல் முதன்மையான கதாபாத்திரங்களாக தேர்ந்தெடுத்து நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றார் நயன்தாரா.இந்நிலையில் நானும் ரவுடி தான் படப்பிடிப்பின் போது இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இடையே காதல் மலர்ந்தது.
இதைத்தொடர்ந்து கடந்த ஏழு வருடங்களாக தீவிரமாக காதலித்து வந்த இவர்கள் கடந்த ஜூன் மாதம் திருமணம் செய்து கொண்டார்கள். விமர்சையாக நடைபெற்ற இந்த திருமணத்தில் பலர் கலந்துகொண்டு வாழ்த்தினர். இந்நிலையில் திருமணம் ஆன பின்பும் நயன்தாரா தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகின்றார்.
இதையடுத்து திருமணத்திற்கு பின் இருவரும் அறிவித்த சூப்பர் தகவல் என்னவென்றால் அவர்களுக்கு குழந்தை பிறந்தது பிரியங்கா சோப்ரா மற்றும் தீபிகா படுகோனேவை தொடர்ந்து அதிக சம்பளம் வாங்கும் நடிகை நயன்தாரா தான். ஒரு படத்துக்கு ரூ. 10 கோடி வரை சம்பளம் பெறுகிறாராம். அதன்படி நயன்தாராவிற்கு தற்போது ரூ.165 கோடி அளவிற்கு சொத்து இருக்கிறதாம்.

மேலும் ரவுடி பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை விக்னேஷ் சிவனுடன் சேர்ந்து நிறுவியுள்ளார். எனவே இருவரது சொத்து மதிப்பையும் சேர்த்து பார்த்தால் ரூ.250 கோடி தாண்டும் என்று தகவல் வெளியாகி உள்ளது.தான்.இந்நிலையில்