விஜய் வம்சியின் இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்து வருகின்றார்.இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஏப்ரல் மாதம் துவங்கப்பட்டு தொடர்ந்து விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.இதையடுத்து இப்படம் பொங்கலுக்கு திரையில் வெளியாகவுள்ளது.
மேலும் இப்படத்தில் முதன் முதலாக விஜய்யுடன் ஜோடிபோட்டு நடிக்கின்றார் ராஷ்மிகா. இந்நிலையில் நேற்று மாலை இப்படத்தில் இருந்து ரஞ்சிதமே எனும் முதல் பாடல் வெளிவந்தது. விஜய் தனது சொந்த குரலில் பாடியுள்ள இந்த பாடல் Youtubeல் தொடர்ந்து பல சாதனைகளை படைத்து வருகிறது.
அதே நேரத்தில் நெட்டிசன்கள் மத்தியில் ட்ரோல் செய்யப்பட்டும் வருகிறது. ரஞ்சிதமே பாடல் காப்பி என்று கூறி சமூக வலைத்தளத்தில் ட்ரோல் செய்யப்பட்டு வரும் நிலையில், ராஷ்மிகாவையும் ட்ரோல் செய்ய துவங்கியுள்ளார்கள்.

ஆம், ரஞ்சிதமே பாடலில் ராஷ்மிகாவை பார்ப்பதற்கு, கரகாட்டம் படத்தில் வரும் கோவை சரளா போல் இருக்கிறார் என்று கூறி வருகிறார்கள்.