தமிழ் சினிமாவையும் தாண்டி தற்போது பாலிவுட் வரை பிரபலமான நடிகையாக வலம் வருகின்றார் சமந்தா. தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நாயகியாக திகழும் சமந்தா புஷ்பா படத்தில் ஓ சொல்றியா மாமா என்ற பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடினார்.
என்னதான் அப்பாடல் பல சர்ச்சைகளை சந்தித்தாலும் இளம் ரசிகர்கள் மத்தியில் செம வைரலானது. இதைத்தொடர்ந்து அவருக்கு பாலிவுட் பட வாய்ப்புகளும் வந்த வண்ணம் இருக்கின்றன.
மேலும் சமந்தா நடிப்பில் வெளியான காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படம் வெற்றி பெற்றுள்ளதால் அவரது மார்க்கெட் மேலும் ஏறியுள்ளது. தற்போது யசோதா மற்றும் சாகுந்தலம் என இரு பிரம்மாண்ட படங்களில் நடித்து வருகின்றார் சமந்தா.
இந்நிலையில் தற்போது இந்தியளவில் புகழ்பெற்ற நடிகையாக விளங்கும் சமந்தா தனது சம்பளத்தை உயர்த்தியுள்ளதாக தகவல் வந்துள்ளது. இதுவரை தான் நடிக்கும் படங்களுக்கு கிட்டத்தட்ட 2 .5 கோடி வரை சம்பளமாக வாங்கிவந்த சமந்தா தனது சம்பளத்தை 4 கோடிவரை உயர்த்தியுள்ளதாக தகவல் வந்துள்ளது.மேலும் தன் தயாரிப்பாளர்களிடமும் சம்பள விஷயத்தில் சமந்தா கண்டிப்பாக இருந்து வருவதும் குறிப்பிடத்தக்கது.