தென்னிந்திய மொழிகளில் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் சமந்தா.கடந்த 12 வருடங்களாக பல மொழிகளில் பல படங்களில் நடித்து வரும் சமந்தா தொடர்ந்து முன்னணி நடிகையாக இருந்து வருகின்றார்.நாயகியாக மட்டுமல்லாமல் சோலோ ஹீரோயினாகவும் சமந்தா நடித்து வருகின்றார்.
தற்போது தென்னிந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளின் பட்டியலில் முன்னணியில் இருக்கின்றார் சமந்தா.இந்நிலையில் நடிகை சமந்தா Myositis என்ற auto immune நோயால் பாதிக்கப்பட்டு இருப்பதாக சமீபத்தில் அறிவித்து இருந்தார். அதற்காக அவர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வரும் நிலையிலும் அவர் யசோதா படத்திற்காக டப்பிங் பேசி இருந்தார்.
அவரது கடமை உணர்வை பலரும் பாராட்டினார்கள். மேலும் சமந்தா விரைவில் குணமடைய வேண்டும் என்று ரசிகர்கள் பிராத்தித்து வருகிறார்கள்.இந்நிலையில் தற்போது சமந்தா இன்று யசோதா படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருக்கிறார். அதற்காக அவர் தயாராக இருக்கும் போட்டோவை வெளியிட்டு இருக்கிறார்.
Like my good friend @rajndk Raj says , no matter what the day is like, and how shitty things are, his motto is to
— Samantha (@Samanthaprabhu2) November 7, 2022
Shower
Shave
Show up !!
I borrowed it for a day ♥️
For #yashodathemovie promotions ..
see you on the 11th pic.twitter.com/9u6bZK3cd2
அந்த புகைப்படங்களில் சமந்தா வாடிய முகத்துடன் இருப்பதை பார்த்து ரசிகர்கள் கலங்கி இருக்கிறார்கள்.