தமிழ், தெலுங்கு திரைப்படங்களில் நடித்து வரும் சமந்தா, தற்போது பான் இந்தியா ஸ்டாராக கலக்கி வருகிறார். சமந்தா நடிப்பில் யசோதா, சாகுந்தலம், குஷி ஆகிய படங்கள் உருவாகி வருகின்றன. இந்நிலையில், அமெரிக்காவில் சிகிச்சையில் இருந்த சமந்தா மும்பை திரும்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 12 ஆண்டுகால சினிமா பயணத்தில் தமிழ், தெலுங்கு, பாலிவுட் என இப்போது மொழிகளைக் கடந்து ரவுண்டு அடித்து வருகிறார், நாக சைத்தன்யாவுடன் காதல், திருமணம், பிரிவு என பல சர்ச்சைகளையும் சோதனைகளையும் கடந்து, பான் இந்தியா ஸ்டார் ஆகிவிட்டார் சமந்தா.
தமிழில் கடைசியாக விஜய் சேதுபதி, நயன்தாராவுடன் இணைந்து ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தில் கதிஜாவாக நடித்திருந்தார் சமந்தா.இந்நிலையில், சாகுந்தலம் படத்தை 3டியில் மாற்ற உள்ளதால் ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

இதனிடையே அமெரிக்கா சென்றிருந்த சமந்தா தற்போது மும்பை திரும்பிவிட்டதாக சொல்லப்படுகிறது.சமந்தாவுக்கு கடந்த சில வருடங்களுக்கு முன் சரும பிரச்னை ஏற்பட்டது. பாலிமார்பஸ் லைட் எரப்ஷன்’ என்ற தோல் நோயால் அவர் பாதிக்கப்பட்டதாகக் கூறப்பட்டது.எப்=நேவ் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்று சமந்தா திரும்பியுள்ளதாக தெரிகின்றது.