விஜய் தற்போது வாரிசு படத்தில் நடித்து வருகின்றார்.இப்படத்தை வம்சி இயக்க தமன் இசையமைத்து வருகின்றார்.மேலும் ராஷ்மிகா நாயகியாக நடிக்க சரத்குமார், பிரபு ,பிரகாஷ் ராஜ் ,குஷ்பு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஏப்ரல் மாதம் துவங்கப்பட்டு தொடர்ந்து விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.
மேலும் இப்படம் அடுத்தாண்டு பொங்கலுக்கு திரையில் வெளியாகவுள்ளது.இதையடுத்து வாரிசு படத்தில் இடம்பெற்ற ரஞ்சிதமே என்ற பாடல் சில நாட்களுக்கு முன்பு வெளியாகி அமோக வரவேற்பை பெற்று வருகின்றது.இந்நிலையில் தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகைகளில் ஒருவராக இருக்கும் சங்கீதா ஜீ தமிழ் நிகழ்ச்சியில் வாரிசு படம் குறித்து பேசியுள்ளார்.

“தளபதி விஜய் பல வருடங்கள் களித்து இப்படியொரு படத்தில் நடிக்கிறார். வாரிசு திரைப்படம் கண்டிப்பாக சிறப்பான Family Entertainer-ஆக இருக்கும். அதுமட்டுமின்றி நல்ல மெசேஜ் கூட படத்தில் இருக்கிறது. குடும்பமாக வந்த இப்படத்தை பார்த்து ரசிக்கலாம்” என்று கூறியுள்ளார்.