பிரபல பாலிவுட் நடிகையான சாரா அலி கான் இந்திய கிரிக்கெட் வீரர் ஷுப்மன் கில்லுடன் டேட்டிங்கில் இருப்பதாக தகவல் வந்துள்ளது. கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான கேதர்நாத் என்ற படத்தின் மூலம் அறிமுகமான சாரா அலி கான் தற்போது பாலிவுட் திரையுலகின் முன்னணி நாயகியாக வலம் வருகின்றார்.
மேலும் கடந்தாண்டு தனுஷ் நடிப்பில் வெளியான அத்ராங்கி ரே படத்தில் தனுஷிற்கு ஜோடியாக நடித்திருந்தார் சாரா அலி கான். அத்ராங்கி ரே படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடமும் பிரபலமானார் சாரா.
இந்நிலையில் தற்போது சாரா அலி கான் இந்திய இளம் கிரிக்கெட் வீரரான கில்லுடன் ஹோட்டலில் ஒன்றாக அமர்ந்து உணவருந்தும் வீடியோ சமூகத்தளங்களில் செம வைரலாகி வருகின்றது.
இதை பார்த்த ரசிகர்கள் சிலர் இவர்கள் இருவரும் டேட்டிங் செய்வதாக பரப்பி வருகின்றனர். இதற்கு முன் சாரா அலி கான் ஹிந்தி நடிகர் கார்த்திக் ஆர்யனை காதலித்து வந்தார், அவர்கள் இருவரும் கடந்த 2020 ஆம் ஆண்டு பிரிந்து விட்டதாக தகவல் பரவின.
மேலும் சுப்மன் கில் சச்சின் டெண்டுல்கரின் மகள் சாரா டெண்டுல்கரை காதலிப்பதாகவும் சொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது
Shubman gill date sara ali khan ko kar eha tha aur hum kisi aur hi sara ko lapet rhe the🥲#Shubmangill #CricketTwitter pic.twitter.com/oEAAXqXgOz
— Arun (@ArunTuThikHoGya) August 29, 2022