தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் விஜய் வாரிசு படத்தில் நடித்து வருகின்றார். முதல் முறையாக இயக்குனர் வம்சியின் இயக்கத்தில் நடிக்கும் விஜய்க்கு இப்படத்தில் ஜோடியாக ராஷ்மிகா நடிக்கின்றார். மேலும் மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்கும் இப்படத்தை பொங்கலுக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.
இதையடுத்து விஜய் இயக்குனர் லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் தளபதி 67 படத்தில் நடிக்கவுள்ளார். இந்நிலையில் தமிழ் சினிமாவில் அனைத்து முன்னணி நடிகர்ளுக்கும் அம்மாவாக நடித்து புகழ்பெற்றவர் சரண்யா பொன்வண்ணன். அஜித், சூர்யா, தனுஷ் போன்ற நடிகர்களுக்கு அம்மாவாக நடித்த சரண்யா பொன்வண்ணன் விஜய்க்கு மட்டும் அம்மாவாக இதுவரை நடிக்கவில்லை.
இந்நிலையில் இதுபற்றி பேசிய சரண்யா பொன்வண்ணன், எனக்கும் விஜய்க்கு அம்மாவாக நடிக்க முடியவில்லை என்ற வருத்தம் இருக்கின்றது. அது ஏன் என்று தெரியவில்லை, விஜய்க்கு அம்மாவாக நடிக்கும் வாய்ப்பு இதுவரை அமையவில்லை.இருப்பினும் எதிர்காலத்தில் கண்டிப்பாக அந்த வாய்ப்பு அமையும் என்றார் சரண்யா பொன்வண்ணன்.