புன்னகை செல்வி சினேகாவும், நடிகர் பிரசன்னாவும் காதலித்து இரு வீட்டார் சம்மதத்துடன் கடந்த 2012ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்கள். அவர்களுக்கு ஒரு மகனும், மகளும் இருக்கிறார்கள்.நட்சத்திர தம்பதிகளாக ஜொலித்து வரும் பிரசன்னா- சினேகா இருவரும் தீபாவளி , பொங்கல் என எந்த விசேஷமாக இருந்தாலும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் வகையில் குடும்பத்துடன் இருக்கும் போட்டோவை இன்ஸ்டாகிராமில் பகிர்வதை வழக்கமாக வைத்து இருக்கிறார்.
இந்நிலையில், நடிகை சினேகாவும் பிரசன்னாவும் விவாகரத்து செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் இருவரும் விரைவில் பிரிந்து விடுவார்கள் என்றும் செய்திகள் சோஷியல் மீடியாவில் கடந்த சில நாட்களாக பரவி வருகிறது.

இந்த செய்தியை பார்த்து பதறிப்போன சினேகா, வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தனது, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிரசன்னாவுடன் இருக்கும் போட்டோவை பகிர்ந்து ‘ஹாப்பி வீக் எண்ட்’என பதிவு செய்துள்ளார். இதனால், விவாகரத்து இல்லை என்பது தெளிவாக தெரிகிறது. இருந்தாலும் விஷமிகள் இது போன்ற வதந்தியை பரப்புவது சரியில்லை அவரது ரசிகர்கள் கருத்துக்கூறி வருகின்றனர்