Skygain News

முடிவுக்கு வந்த பிரபல நடிகையின் காதல்..கடைசில இப்படி ஆகிட்டே..!

பாலிவுட் திரையுலகில் பிரபல நடிகையாக வலம் வருபவர் சுஷ்மிதா சென். பல படங்களில் நடித்து பிரபலமான சுஷ்மிதா சென் பல காதல் கிசுகிசுக்களில் ஈடுபட்டுள்ளார். முதலில் ரோமன் என்பவரை காதலித்து வந்த சுஷ்மிதா சென் அதன் பின் அவருடனான காதலை முறித்துக்கொண்டார். அதைத்தொடர்ந்து சுஷ்மிதா சென் மற்றும் ஐபிஎல் போட்டிகளை உருவாக்கிய லலித் மோடி ஆகிய இருவரும் காதலித்து வருவதாக சில மாதங்களுக்கு முன்பு அறிவித்தனர்.

அவர்கள் ஜோடியாக இருக்கும் புகைப்படங்களும் வெளியாகி இணையத்தில் வைரல் ஆனது.. மேலும் சுஷ்மிதா சென் பணத்திற்காகத்தான் லலித் மோடியை காதலித்து வருவதாக ரசிகர்கள் கடுமையாக விமர்சித்தனர்.தற்கு சுஷ்மிதா பதிலடி கொடுத்து பேசி இருந்தார்.ஜூலையில் லலித் மோடி காதலை அறிவித்தபோது அவரது இன்ஸ்டா பயோவில் “finally starting a new life with my partner in crime. My love @sushmitasen47” என குறிப்பிட்டு இருந்தார்.

ஆனால் தற்போது அவர் சுஷ்மிதா சென் பற்றிய வரியை இன்ஸ்டாவில் இருந்து நீக்கிவிட்டார். அதனால் அவர்கள் பிரிந்துவிட்டார்களா என்கிற கேள்வி எழுந்திருக்கிறது. இரண்டு மாதங்களிலேயே அவர்கள் பிரிவது பாலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இருப்பினும் இதைப்பற்றி அவர்கள் எந்த ஒரு அதிகாரபூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

Share this post with your friends

Leave a Comment

Your email address will not be published.