பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தபு. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற தென்னிந்திய மொழி படங்களிலும் நடித்துள்ளார். குறிப்பாக தமிழில் இவர் காதல் தேசம், அஜித்துடன் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், தாயின் மணிக்கொடி, இருவர், சிநேகிதியே போன்ற திரைப்படங்களில் நடித்திருந்தார்.
51 வயதாகும் தபு, இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை.இந்நிலையில் தபு அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில், எனக்கு எல்லோரையும் போல தாயாக வேண்டும் என்ற ஆசை உள்ளது. அதற்காக திருமணம் செய்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. திருமணம் ஆகாமலே கர்ப்பம் ஆகலாம். வாடகைத் தாய் மூலமாகவும் தாயாகும் வாய்ப்பு உள்ளது.
எனக்கு தாயாக வேண்டும் என தோன்றினால் அந்த முறையை நான் கடைபிடிப்பேன். என்னை யாராலும் தடுக்க முடியாது.திருமணம் ஆகாவிட்டால் செத்துப் போக மாட்டோம். திருமணம் அவசியம் இல்லை.
தற்போது எனது நடிப்பு தொழிலில் கிடைக்கும் மகிழ்ச்சியை அனுபவித்து வருகிறேன். காதலுக்கும் திருமணத்துக்கும் வயதுக்கு சம்பந்தம் இல்லை. திருமணத்திற்கும் குழந்தைகளை பெற்றுக் கொள்வதற்கும் வயது சம்பந்தமில்லை. இந்த காலத்தில் எதற்கும் வயது ஒரு தடையல்ல” என்றார். தபுவின் இந்த கருத்து இணையத்தில் வைரலாகி வருகிறது.