பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி கடந்த ஞாயிற்றுக் கிழமை முதல் தொடங்கி ஒளிபரப்பாகி வருகிறது. இதில் 20 பேர் போட்டியாளர்களாக பங்கேற்றுள்ளனர். முதல் வாரத்திலேயே சுவாரசியமான டாஸ்க்குகளை கொடுத்து பட்டையை கிளப்பி வருகிறார் பிக்பாஸ்.
இந்நிலையில் நடன இயக்குனர் ராபர்ட்டை பற்றி வனிதா பேசிய விஷயம் தான் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது.அவர் கூறியதாவது, “ராபர்ட் என்ன என் புருஷனா இல்லை பாய் பிரென்ட்டா. நானே பப்ளிசிட்டிகாக அவனை யூஸ் செய்தேன்.”

“2007ல் அவன் யாரையோ கல்யாணம் பண்ணனாம். அது யார் என எனக்கு தெரியவில்லை. பல கல்யாணம் நடந்திருக்கு. அவன் மனைவி மற்றும் குழந்தை எங்கே என தெரியவில்லை. தற்போது சிங்கிள் என இமேஜ் உருவாக்கி கொண்டிருக்கிறார் அவர்” என வனிதா கூறி இருக்கிறார். இதைத்தொடர்ந்து தற்போது ரசிகர்கள் இவர் சொன்ன விஷயத்தி மீம் போட்டு பரப்பி வருவது குறிப்பிடத்தக்கது