பாலிவுட் டிவி சீரியல் நிகழ்ச்சிகளில், பிரபல நடிகையாக இருப்பவர் வைஷாலி தக்கர். 29 வயதாகும் இவர், இந்தி வட்டாரத்தில் பிரபலமான சின்னத்திரை நடிகையாக இருந்து வருகிறார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவரை ஏராளமானோர் ஃபாலோ செய்து வருகின்றனர்.
கடந்த ஒரு வருடமாக, இந்தூரில் தனது தந்தை, சகோதரர் உடன் வசித்து வரும் வைஷாலி, நேற்று காலை அறையில் இருந்து வெளியில் வராததையடுத்து அவரின் தந்தை கதவை உடைத்து பார்த்துள்ளார். அப்போது, வைஷாலி தற்கொலை செய்து உயிரிழந்ததைக் கண்டு வீட்டில் உள்ளவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அவரது உடலை கைப்பற்றி உடற்கூராய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், “வைஷாலியிடம் இருந்து தற்கொலை கடிதம் ஒன்று சிக்கியுள்ளது.

இதனடிப்படையில் அவரது முன்னாள் காதலனிடம் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர். முன்னாள் காதலனின் டார்ச்சரே இந்த தற்கொலைக்கு காரணமாக இருக்கும் என்று போலீஸ் தரப்பில் சந்தேகிக்கப்படுகிறது