பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சி மூலம் தமிழக மக்களுக்கு பிரபலமானவர் ராப் பாடகர் ஏ.டி.கே.ஏ.ஆர்.ரகுமான், யுவன், விஜய் ஆண்டனி, இமான், சந்தோஷ் நாராயணன் போன்ற பலருடன் பணிபுரிந்துள்ள ஏ.டி.கே, அனிருத்துடன் பணிபுரிய ஆவலாக இருக்கிறார்.
இந்நிலையில் அவர் ஏ.ஆர்.ரஹ்மானுடன் பணிபுரியும் வாய்ப்பு கிடைத்தது பற்றிய தகவல் வந்துள்ளது.அதாவது ,ஏ ஆர் ரகுமான் இமெயில் எப்படியோ கிடைத்தபோது, தன்னுடைய பாடல்களை அனுப்பி ஏ.டி.கே வாய்ப்பு கேட்டுள்ளார். அழைப்பு வந்தபோது அவரை நேரில் சந்தித்து பேசியிருக்கிறார். பின்னர் கடல் படத்தில் பாடல் எழுதி பாட அழைத்திருக்கிறார் ரகுமான்.

முதலில் ஆர்வப்பட்டு, ரஹ்மானின் ‘நோ பிராப்ளம்’ வரிகள் போல் எழுதிக் கொடுக்க,”இல்லை இல்லை இது வேண்டாம். போராட்டக்காரர் பாடும் வகையில் நீங்கள் எழுதும் உங்கள் தனித்துவமான வரிகள்தான் வேண்டும்” என்று கேட்க அப்படி எழுதியதுதான் மகுடி பாடல். அதன் பின் லிங்கா, ஓ காதல் கண்மணி, அச்சம் என்பது மடமையடா, மெர்சல் உள்ளிட்ட பல பாடல்கள் அவரது இசையில் எழுதி பாடியிருக்கிறார் ஏ.டி.கே.