நேற்று வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் இடையேயான போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியது. ஆசிய கோப்பை 2022 கிரிக்கெட் போட்டியில் நேற்று ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேசம் அணிகள் மோதின. டாஸ் வென்ற வங்கதேச அணி கேப்டன் ஷகிபுல் ஹசனும், முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
இதனையடுத்து களமிறங்கிய தொடக்க வீரர்கள் முகமது நயிம் 6 ரன்களுக்கு, அனாமுல் ஹக் 5 ரன்களிலும், ஆட்டமிழந்தனர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அந்த அணியின் நட்சத்திர வீரர்கள் கேப்டன் ஷகிபுல் ஹசன் 11 ரன்களிலும், முஸ்பிசுர் ரஹிம் 1 ரன்னிலும் ஆட்டமிழக்க, வங்கதேச அணி 28 ரன்களை சேர்ப்பதற்குள் 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
இதனையடுத்து மகமுல்லா மற்றும் மொஸ்தேக் ஹூசைன் நிதானமாக விளையாடி அணியை சரிவிலிருந்து மீட்க முயற்சித்தனர்.எனினும் மகமுல்லா 25 ரன்கள் எடுக்க, மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறினர். மொஸ்தேக் ஹூசைன் மட்டும் 48 ரன்கள் குவிக்க, 20 ஓவர் முடிவில் வங்கதேச அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டு இழப்பிற்கு 127 ரன்கள் எடுத்தது.
இந்தப் போட்டியில் முஜிபுர் ரஹ்மான் 4 ஓவர் வீசி 16 ரன்களை விட்ட கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.128 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணியில் குர்பாஸ் 11 ரன்களில் ஆட்டமிழந்தார்.மற்றொரு தொடக்க வீரரரான ஹசரத்துலா சாஷாய் 11 ரன்களில் வெளியேற, களத்துக்கு வந்த இப்ராஹிம் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 42 ரன்கள் சேர்த்தார்.
14 ஓவரில் ஆப்கானிஸ்தான் 65 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில், கடைசி 6 ஓவரில் வெற்றிக்கு 63 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது நஜிபுல்லா 17 பந்துகளில் 43 ரன்கள் விளாசினார். இதில் 6 சிக்சர்களும், ஒரு பவுண்டரியும் அடங்கும் இதன் மூலம் வங்கதேசம் அணி 18.3 ஓவரில் 131 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து வெற்றி பெற்றது.