இந்திய அணியின் நட்சத்திர ஆட்டக்காரராக கோலியின் ஓய்வு பற்றி முன்னாள் பாகிஸ்தான் வீரர் ஷாஹித் அப்ரிடி பேசியது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்திய அணியை தன் அபாரமான ஆட்டத்தால் பலமுறை வெற்றிபெற செய்துள்ள விராட் கோலிக்கு சமீபகாலமாக சோதனை காலம் நடந்து வருகின்றது என்றே சொல்லலாம்.
இந்திய அணியின் கேப்டன் பொறுப்பை துறந்து பேட்டிங்கில் கவனம் செலுத்தலாம் என்று எண்ணிய கோலி பேட்டிங்கிலும் சொதப்பி வருகின்றார். இருப்பினும் ஆப்கானிஸ்தான் எதிராக சதம் அடித்தாலும் அவர்மீது இன்னமும் சில குற்றச்சாட்டுகள் வந்த வண்ணம் தான் உள்ளன.
இந்நிலையில் விராட் கோலி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற வேண்டும் என்று பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷாஹித் அப்ரிடி கூறியுள்ளார். மேலும் அவர் கூறியதாவது, கோலி ஒரு சாம்பியன், நீங்கள் ஓய்வு பெறும் ஒரு கட்டம் வரும் என்று நான் நம்புகிறேன். ஆனால் அந்த சூழ்நிலையில் , அணியில் உயரத்தில் இருக்கும் போதே வெளியே செல்ல வேண்டும்.

அணி தானாக வெளியேற்றுவதற்கு முன்பு இதனை செய்து விட வேண்டும்” என்று அப்ரிடி கோலிக்கு அறிவுரை கூறியுள்ளார். இவ்வாறு இவர் கூறியது இந்திய ரசிகர்களை கடுப்பேற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.