தற்போது T20 உலகக்கோப்பை ஆஸ்திரேலியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.இதில் இந்திய அணி பங்களாதேஷ் அணிக்கு எதிராக த்ரில் வெற்றி பெற்றது.ஆனால் இந்த போட்டி தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், டி20 உலக கோப்பையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) நியாயமற்ற முறையிலும், இந்தியாவுக்கு ஆதரவாகவும் செயல்பட்டு வருகிறது என்று பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷாஹித் அப்ரிடி குற்றம்சாட்டியுள்ளார்.

அவர் பேசியதாவது , “மைதானம் எவ்வளவு ஈரமாக இருந்தது என்பதை நீங்கள் பார்த்தீர்கள். ஆனால் ஐசிசி இந்தியாவுக்கு சாதகமாக முடிவெடுத்துள்ளது. அவர்கள் இந்தியா எப்படியாவது அரையிறுதிக்கு செல்லவதை உறுதி செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் நடுவர்கள் செயல்பட்டார்கள் என கடுமையாக்க குற்றம் சாடியுள்ளார் அப்ரிதி