அஜித் தற்போது வினோத் இயக்கத்தில் AK61 என்ற படத்தில் நடித்து வருகின்றார். வலிமை படத்திற்கு பிறகு இவர்கள் இணைந்துள்ள இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஏப்ரல் மாதம் துவங்கி தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. கடந்த பிப்ரவரி மாதம் வெளியான ‘வலிமை’ படம் வசூலில் சக்கை போடு போட்டாலும், ரசிகர்களின் எதிர்பார்ப்பினை முழுமையாக பூர்த்தி செய்யவில்லை.
மேலும் இந்தப்படத்தில் அஜித்தின் லுக் மிக மோசமாக விமர்சிக்கப்பட்டது. வலிமையை தொடர்ந்து ‘ஏகே 61’ படத்தில் மூன்றாவது முறையாக வினோத், போனி கபூர், அஜித் மூவரும் இணைய உள்ளனர். ஏகே 61′ படத்திற்காக அஜித் ஏற்றுள்ள புதிய கெட்டப்பில் இருக்கும் புகைப்படங்கள் அண்மையில் வெளியாகி இணையத்தில் தீயாக பரவியது. ‘
வலிமை’ படத்தில் ட்ரோல் செய்யப்பட்ட அஜித்தின் லுக் பற்றிய விமர்சனங்களை எல்லாம் அடித்து நொறுக்கும்படி புகைப்படங்கள் வெளியானது.இந்நிலையில் தற்போது இந்த படத்தின் டைட்டில் ‘துணிவு’ மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.
#ThunivuFirstLook #AK61FirstLook #NoGutsNoGlory #HVinoth #AK61
— Vignesh Shivan (@VigneshShivN) September 21, 2022
Getting ready with all the fire 🔥 power ❤️❤️💐💐💐
Wishing the best to the awesome team for a memorable blockbuster! #BoneyKapoor @SureshChandraa @DoneChannel1 pic.twitter.com/tleGJS0cj0
துப்பாக்கியுடன் அஜித் ஸ்டைலாக அமர்ந்திருக்கும் ‘துணிவு’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் கொண்டாட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.