அஜித் தற்போது மூன்றாவது முறையாக வினோத் இயக்கத்தில் AK61 படத்தில் நடித்து வருகின்றார். நேர்கொண்டப்பார்வை மற்றும் வலிமை படங்களை தொடர்ந்து அஜித், வினோத் மற்றும் போனி கபூரின் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. நேர்கொண்டபர்வை வெற்றிபெற்ற நிலையில் வலிமை திரைப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது.
எனவே தற்போது நடித்துவரும் AK61 திரைப்படத்தை மிகப்பெரிய வெற்றிப்படமாக கொடுக்க அஜித் மற்றும் வினோத் கூட்டணி உழைத்து வருகின்றனர். இந்நிலையில் இப்படத்தை அடுத்து இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் AK62 படத்தில் நடிக்கவுள்ளார் அஜித்.

இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்தாண்டு ஜனவரியில் துவங்கவுள்ளது. இந்நிலையில் அஜித் தன் அடுத்தடுத்த படங்களின் அறிவிப்பை வெளியிட்டு வரும் நேரத்தில் அவரின் AK63 படத்தைப்பற்றிய அறிவிப்பும் வெளியாகியுள்ளது.
அதாவது அஜித் முதல் முறையாக சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிக்கவுள்ளதாகவும், இப்படத்தை அஜித்தின் ஆஸ்தான இயக்குனரான சிறுத்தை சிவா இயக்கவுள்ளதாகவும் தகவல் வந்துள்ளது. மேலும் இப்படத்திற்கு வரம் என பெயரிட்டுள்ளதாகவும் தகவல்கள் வருவது குறிப்பிடத்தக்கது.