நடிகர் அஜித் நடிப்பில் துணிவு திரைப்படம் தற்போது தயாராகி உள்ளது. எச்.வினோத் இயக்கியுள்ள இப்படத்தில் அஜித்துடன் மலையாள நடிகை மஞ்சு வாரியரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இப்படம் வருகிற ஜனவரி 12-ந் தேதி பொங்கல் பண்டிகையையொட்டி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. இதற்கான பணிகள் தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.இவ்வாறு தொடர்ந்து படங்களில் பிசியாக நடித்து வந்தாலும், அவ்வப்போது குடும்பத்தினருடன் வெளிநாட்டுக்கு சுற்றுலா செல்வதும், நண்பர்களுடன் பைக் டிரிப் செல்வதையும் வழக்கமாக வைத்துள்ளார் அஜித்.
அந்த வகையில் பிரான்ஸ் நாட்டுக்கு சுற்றுலா சென்றபோது அஜித்துடன் எடுத்த புகைப்படத்தை அவரது மனைவி ஷாலினி வெளியிட்டுள்ளார்.அந்த புகைப்படத்தில் நடிகர் அஜித் தனது மனைவியை கட்டிப்பிடித்தபடி போஸ் கொடுத்து உள்ளார்.
A pic of Actor #AK and his wife Mrs. Shalini Ajith Kumar from #Lyon France 🇫🇷 pic.twitter.com/ZX6Fne2zH4
— Ramesh Bala (@rameshlaus) November 27, 2022
சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் இணைந்த ஷாலினி, இந்த புகைப்படத்தை பதிவிட்டு ஹார்டின் எமோஜியையும் பதிவிட்டு இருக்கிறார். ஷாலினி பதிவிட்ட இந்த புகைப்படத்திற்கு விறுவிறுவென லைக்குகள் குவிந்து வருகின்றன.