அஜித் தற்போது வினோத்தின் இயக்கத்தில் துணிவு படத்தில் நடித்து வருகின்றார்.வினோத்தின் இயக்கத்தில் போனி கபூர் மிகப்பிரமாண்டமாக தயாரித்து வரும் இப்படம் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. கடைசியாக அஜித்தின் நடிப்பில் வெளியான வலிமை திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.
மேலும் ரசிகர்கள் இப்படத்திற்காக மூன்று வருடங்களுக்கு மேல் காத்திருந்தனர். இதன் காரணமாக ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர். இந்நிலையில் அஜித் தற்போது நடித்து வரும் துணிவு படத்தின் மூலம் மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்து வெற்றிப்பாதைக்கு திரும்பும் முனைப்பில் இருக்கின்றார்.
இந்நிலையில் அஜித்தின் துணிவு திரைப்படம் விஜய்யின் வாரிசு படத்துடன் பொங்கலுக்கு களமிறங்க இருக்கின்றது.இதைத்தொடர்ந்து நேற்று வாரிசு படத்திலிருந்து ப்ரோமோ பாடல் வெளியானது.இதையடுத்து தற்போது அஜித்தின் துணிவு படத்திலிருந்து அப்டேட் வந்துள்ளது.

துணிவு திரைப்படத்தின் டப்பிங் பணியை அஜித் முடித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.இதனை ரசிகர்கள் தற்போது ட்ரெண்டாகி வருகின்றது.