Skygain News

நடிப்பிற்கு குட் பை சொல்லும் அஜித்..உச்சகட்ட சோகத்தில் ரசிகர்கள்..!

அஜித் தற்போது வலிமை படத்திற்க்கு பிறகு வினோத் இயக்கத்தில் துணிவு படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஏப்ரல் மாதம் துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்ததாகவும், இப்படம் அடுத்தாண்டு பொங்கலுக்கு திரையில் வெளியாகவுள்ளதாகவும் தகவல்கள் வருகின்றன.

மேலும் அடுத்தாண்டு பொங்கலுக்கு விஜய்யின் வாரிசு திரைப்படமும் வெளியாகவுள்ளது அஜித் துணிவு படத்திற்கு பிறகு இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் கூட்டணி அமைக்கவுள்ளார். இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கவுள்ளார்.

அஜித் சமீபகாலமாக சீரியஸான கதையம்சங்களில் நடித்து வருவதால் சற்று ஜாலியான படம் ஒன்றில் அஜித் நடிக்க முடிவுசெய்துள்ளதாகவும், அதன் காரணமாக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வந்தன.

இந்நிலையில் தற்போது அஜித் பற்றி பரவும் தகவலால் அவரது ரசிகர்கள் சோகத்தில் இருக்கின்றனர், அதாவது அஜித் விக்னேஷ் சிவனின் AK62 படத்தை முடித்துவிட்டு 18 மாதங்கள் பல நாடுகளுக்கு பைக் சுற்றுலா செல்ல இருப்பதாகவும், அந்த 18 மாதங்கள் அஜித் எந்த படப்பிடிப்பிலும் கலந்துகொள்ள மாட்டார் எனவும் தகவல் வந்துள்ளது. இதனைக்கேட்ட அஜித்தின் ரசிகர்கள் சோகத்தில் இருக்கின்றனர்.

Share this post with your friends

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

என்னையும் அட்ஜஸ்ட்மெண்ட் பண்ண சொன்னாங்க! பிரபல நடிகரின் மகள் பேட்டி…

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற வரலட்சுமி சரத்குமார், திரைத்துறையில் நடிகைகளுக்கு கொடுக்கப்படும் பாலியல்...

Read More