அஜித் நடிப்பில் உருவாகியுள்ள ‘துணிவு’ படத்தின் ரிலீசுக்காக வெறித்தனமாக காத்திருக்கின்றனர் ரசிகர்கள். இந்தப்படத்தின் இறுதிக்கட்ட பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விஜய்யின் ‘வாரிசு’ படத்துடன் மோதவுள்ளது ‘துணிவு’. இதனால் இரண்டு தரப்பு ரசிகர்களும் படத்தின் ரிலீசுக்காக இப்போதே ஆர்வமாக காத்திருக்கின்றனர்.
இதன் ஷூட்டிங் முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இப்படத்தை பொங்கல் வெளியீடாக ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளது படக்குழு. உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் ‘துணிவு’ படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை கைப்பற்றியுள்ளது.
Thunivu mass Look Done by Celebrity Hair stylist in Town Dev sakthivel 🔥#Thunivu #HVinoth #Ajithkumar𓃵 pic.twitter.com/XAmKoXhjD3
— Director H Vinoth Fans Club (@dirhvinoth7) November 29, 2022
இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விட்ட போதிலும், அஜித் துணிவு பட லுக்கிலேயே வலம் வந்து கொண்டிருந்த நிலையில், தற்போது தாடி, மீசை போன்றவற்றை மழித்து விட்டு… மாஸ் லுக்கிற்கு மாறியுள்ளார். இவருடைய நியூ லுக் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.