அஜித்தின் துணிவு திரைப்படம் பொங்கலுக்கு ரிலீஸாக உள்ளதால், அவரது ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். முக்கியமாக விஜய்யின் வாரிசு படமும் பொங்கலுக்கு வெளியாகவுள்ளதால் அஜித் ரசிகர்கள் துணிவு படத்தை பயங்கரமாக ப்ரோமோட் செய்து வருகின்றனர்.
எப்போதும் மீடியா வெளிச்சம் படாமல் இருக்கும் அஜித், இப்போதெல்லாம் செல்லும் இடங்களில் எல்லாம் ரசிகர்களுடன் போட்டோ எடுத்து வருகிறார். இந்த புகைப்படங்களை அஜித் ரசிகர்கள் சோஷியல் மீடியாக்களில் ஷேர் செய்து ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.அதேபோல், அஜித் தனது ரசிகர்களை சந்திப்பதே அரிதாக இருக்கும் நிலையில், கடந்த சில நாட்களாக அவர்களை அடிக்கடி சந்தித்து வருகிறார்.
Ajith's Panivu at Thunivu Shooting spot:
— Blue Sattai Maran (@tamiltalkies) November 12, 2022
Don't call me sir. Call me 'Anna'. pic.twitter.com/EorQcrIBAn
அஜித் பைக்கிலோ அல்லது காரிலோ செல்லும் போது அவரை ரசிகர்கள் பின் தொடர்ந்து வந்தனர். அப்படியெல்லாம் என்னை யாரும் ஃபாலோ செய்ய வேண்டாம், நீங்கள் பத்திரமாக இருக்க வேண்டும் என அஜித் சமீபத்தில் ரசிகர்களுக்கு அட்வைஸ் செய்திருந்தது வைரலானது. அதேபோல், அடுத்து ஒரு ரசிகரின் முகநூல் பதிவும் ட்ரெண்ட் ஆகி வருகிறது.