தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அஜித்.இவர் தற்போது வினோத் இயக்கத்தில் துணிவு படத்தில் நடித்து வருகின்றார்.இந்நிலையில் இன்று காலை தன்னுடைய மேலாளர் சுரேஷ் சந்திரா மூலம் முக்கிய தகவல் ஒன்றை பகிர்ந்து கொண்டார்.
இந்த அறிக்கையில் “உங்களை சுற்றி நெகட்டிவிட்டியோ.. டிராமாவோ.. இல்லாத நபர்களை வைத்துக் கொள்ளுங்கள். ஊக்கப்படுத்த கூடிய இலக்கை நிர்ணயித்து கொள்ளுங்கள். பொறாமைக்கோ.. வெறுப்புக்கோ.. நேரமில்லை. உங்களது சிறப்பான பணியை மட்டும் கைவிடாதீர்கள் என கூறப்பட்டிருந்தது”
Annan #AjithKumar ❤️#Thunivu #ThunivuPongal pic.twitter.com/IjvfcgiRbm
— AJITH FANS COMMUNITY (@TFC_mass) November 17, 2022
.அதாவது அஜித் வெளியிட்டுள்ள இந்த அறிக்கையில் “பொறாமைகோ வெறுப்புக்கோ நேரமில்லை. சிறப்பான பணியை மட்டும் கை விடாதீர்கள் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த கருத்தை அவர் கூறியதற்காக நோக்கம், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, அஜித் – விஜய் நடித்த படங்கள் ஒரே நாளில் வெளியாவதால் ரசிகர்கள் பொறாமை – வெறுப்பு போன்ற குணங்களை துறந்து இரு படங்களுக்கும் ஆதரவு கொடுக்க வேண்டும் என்று கூறியதாகவே பார்க்கப்படுகிறது.