தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவர் நடிகர் அஜித், இவரின் துணிவு திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது. அதன்படி வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அஜித்தின் துணிவு வெளியாகவுள்ளது.
அதே சமயத்தில் விஜய்யின் வாரிசு திரைப்படமும் பொங்கலுக்கு வெளியாகின்றது.எனவே பல வருடங்களுக்கு பிறகு அஜித் மற்றும் விஜய் படங்கள் ஒரே தினத்தில் வெளியாவதால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கின்றனர்.
இந்நிலையில் வாரிசு படத்தை ஒப்பிடும் போது துணிவு படத்தின் வியாபாரம் சற்று மந்தமாக இருப்பதாக தகவல்கள் வந்துள்ளது.ஏனென்றால் துணிவு படம் அயல்நாட்டில் திரையிடப்படும் உரிமை இன்னும் விற்கப்படவில்லையாம்.
விஜய்யின் வாரிசு திரைப்படம் மிகப்பெரிய தொகைக்கு அயல்நாட்டில் திரையிட விநியோகஸ்தர்கள் வாங்கியுள்ளனர். ஆனால் அஜித்தின் கடைசி இரண்டு திரைப்படங்கள் அந்த அளவிற்கு அயல்நாட்டில் வசூல் செய்யாததால் வெளிநாட்டு வியாபாரம் மந்தமாக இருப்பதாக தகவல் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.