அஜித் தற்போது வினோத் இயக்கத்தில் துணிவு படத்தில் நடித்து வருகின்றார்.நேர்கொண்டப்பார்வை ,வலிமை படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக இக்கூட்டணி இணைந்துள்ளது.மிகுந்த எதிர்பார்ப்பில் உருவாகும் இப்படம் அடுத்தாண்டு பொங்கலுக்கு திரையில் வெளியாகவுள்ளது.
பொங்கலுக்கு விஜய்யின் வாரிசு படமும் ரிலீஸ் ஆகும் என்பதால் பெரிய அளவில் போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.துணிவு தமிழ்நாடு ரிலீஸ் உரிமை மட்டுமே தற்போது விற்பனை ஆகி இருக்கிறது. ரெட் ஜெயன்ட் நிறுவனம் தான் இதை வெளியிடுகிறது.

ஆனால் “கேரளா, ஆந்திரா, கர்நாடகா போன்ற இடங்கள் ரிலீஸ் செய்ய enquiry கூட வரவில்லை, வெளிநாட்டு உரிமையை வாங்க யாருமே இதுவரை வரவில்லை” என ஒரு பிரபல பத்திரிகையாளர் தெரிவித்து இருக்கிறார்.இதன் காரணமாக படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் வருத்தத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது