அஜித் தற்போது வினோத் இயக்கத்தில் துணிவு படத்தில் நடித்து வருகின்றார். சில நாட்களுக்கு முன்பு இப்படத்தின் டைட்டில் மற்றும் முதல் பார்வை வெளியான நிலையில் தற்போது இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. போனி கபூர் இப்படத்தை தயாரிக்க ஜிப்ரான் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.
பல ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் நடந்த ஒரு வங்கி கொள்ளையை அடிப்படையாக கொண்டு இப்படம் உருவாகி வருவதாக தகவல் வருகின்றது. சமுத்திரக்கனி, மஞ்சு வாரியர் என பலர் இப்படத்தில் நடித்து வருகின்றனர்.விரைவில் இப்படத்தின் முதல் பாடல் வெளியாகவுள்ளது.
இந்நிலையில் அஜித்தின் துணிவு படம் பொங்கலுக்கு வெளியாகும் என சில காலமாக தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன. அதே சமயத்தில் பொங்கலுக்கு விஜய்யின் வாரிசு திரைப்படமும் வெளியாவதால் மீண்டும் அஜித் மற்றும் விஜய் படங்கள் மோதும் வாய்ப்பு அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றன.
ஆனால் தற்போது வந்த தகவலின் படி இரண்டு படங்களும் பொங்கலுக்கு ஒன்றாக வெளியாகாது என தெரிகின்றது. தமிழ் சினிமாவில் பிரபல விநியோகஸ்தராக வலம் வரும் திருப்பூர் சுப்ரமணியம் பேசுகையில், கண்டிப்பாக இரண்டு படங்களுக்கும் பொங்கலுக்கு ஒன்றாக வெளியாகாது.

விஜய்யின் வாரிசு வெளியீடுபொங்கல் என அறிவித்துள்ளதால் அது கண்டிப்பாக பொங்கலுக்கு வெளியாகும். அதே சமயத்தில் அஜித்தின் துணிவு திரைப்படம் டிசம்பர் 20 ஆம் தேதி போல வெளியாகும் என தெரிவித்துள்ளார்.இதன் காரணமாக மீண்டும் விஜய் மற்றும் அஜித் படங்கள் ஒரே மாணலில் வெளியாகும் என எதிர்பார்த்தவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது