அஜித் வலிமை படத்திற்கு பிறகு மீண்டும் வினோத் இயக்கத்தில் AK61 படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்திற்கு தற்போது துணிவு என பெயர் வைத்துள்ளனர். வழக்கமாக அஜித் படங்களுக்கு V என்ற எழுத்தில் ஆரம்பமாகும் பெயர் தான் வைக்கப்பட்டு வந்தது. ஆனால் இம்முறை அந்த சென்டிமெண்டை எல்லாம் அஜித் தகர்த்துள்ளார்.
மேலும் வலிமை திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்பதால் இப்படத்தை மிகப்பெரிய வெற்றிப்படமாக கொடுக்கவேண்டும் என்ற முனைப்பில் இருக்கின்றார் அஜித். இந்நிலையில் இப்படம் ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாவதாக தகவல் வந்துள்ளது. அதாவது துணிவு திரைப்படம் கடந்த 1987 ஆம் ஆண்டு பஞ்சாப்-ல் நடந்த வங்கி கொள்ளை குறித்த தழுவலாக தான் இருக்கும் என தகவல் பரவி வருகிறது.
#Thunivu #NoGutsNoGlory#AK61FirstLook #AK61 #Ajithkumar #HVinoth
— Boney Kapoor (@BoneyKapoor) September 21, 2022
@ZeeStudios_ @BayViewProjOffl @SureshChandraa #NiravShah @GhibranOfficial #Milan @SupremeSundar_ @editorvijay #Kalyan #AnuVardhan @premkumaractor #MSenthil @SuthanVFX #CSethu #SameerPandit @anandkumarstill pic.twitter.com/Mb7o0fuGTT
இந்திய வரலாற்றிலே மிக பெரிய வங்கி கொள்ளையாக அந்த சம்பவம் தான் கருதப்படுகிறது. அந்த கொள்ளை 4.5 மில்லயன் வரை கொள்ளையடிக்கப்பட்டு இருக்கிறதாம். இந்தியாவையே உலுக்கிய இந்த கொள்ளை சம்பவத்தை அடிப்படையாக கொண்டுதான் இப்படம் உருவாகி வருவதாக ஒரு தகவல் பரவி வருகின்றது