அஜித் தற்போது வினோத் இயக்கத்தில் துணிவு படத்தில் நடித்து வருகின்றார். கடைசியாக இவர்கள் கூட்டணியில் உருவான வலிமை திரைப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய தவறியது. எனவே துணிவு படத்தின் மூலம் மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்து வெற்றிப்பாதைக்கு திரும்ப அஜித் காத்துக்கொண்டிருக்கிறார்.
தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் அடுத்தாண்டு பொங்கலுக்கு இப்படம் திரையில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 1987 ஆம் ஆண்டு இந்தியாவில் நடந்த ஒரு வங்கி கொள்ளையை மையமாக வைத்து இப்படம் உருவாவதாக தகவல் வந்துள்ளது.இந்நிலையில் அஜித் தற்போது சென்னையில் படப்பிடிப்பில் கலந்துகொண்டு வருகின்றார்.
அப்போது அஜித்தை காண பல ரசிகர்கள் ஷூட்டிங் நடக்கும் இடத்தில கூடினர். மேலும் படப்பிடிப்பு நடக்கும் போது சுவரின் மீது ஏறி பல ரசிகர்கள் அஜித்தை பார்த்து ஆரவாரம் செய்தனர்.

பின்பு அஜித் வீட்டிற்கு செல்லும்போது பைக்கில் அவரை பின்தொடர்ந்தனர். இதையெல்லாம் பார்த்த அஜித் அந்த ரசிகர்களை அழைத்தார். ரசிகர்கள் அஜித்தை காண ஆவலாக சென்றனர். அப்போது அஜித் இவ்வாறு சுவரின் மீது ஏறி, பைக்கில் பின்தொடர்ந்து என்னை பார்க்க வரவேண்டாம் என கூறியுள்ளார் அஜித்