தமிழ் சினிமாவில் தனக்கென தனி பாதையை உருவாக்கி அதில் பயணம் செய்து வருபவர் தான் நடிகர் அஜித். அவர் நடிப்பில் கடைசியாக வெளியான வலிமை திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.
இப்படத்திற்காக அஜித் ரசிகர்கள் மூன்று ஆண்டுகளுக்கு மேல் காத்திருந்தனர். ஆனால் அவர்களுக்கு கடைசியில் ஏமாற்றமே மிஞ்சியது. எனவே அஜித் தான் நடிக்கும் அடுத்த படத்தை மிகப்பெரிய வெற்றிப்படமாக கொடுத்து ரசிகர்களை மகிழ்விக்கும் முயற்ச்சியில் இறங்கியுள்ளார்.
அந்த வகையில் அஜித் தற்போது வினோத் இயக்கத்தில் AK61 படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது ஹைதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. மேலும் இப்படத்தை அடுத்தாண்டு பொங்கலுக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில் அஜித் AK61 படத்திற்கு பிறகு விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு AK61 படம் முடிவடைந்ததும் இந்தாண்டு இறுதியில் துவங்கவுள்ளது.
இந்நிலையில் தற்போது இப்படத்தை பற்றிய ஒரு தகவல் இணையத்தில் செம வைரலாகி வருகின்றது. அதாவது உலக அழகி ஐஸ்வர்யா ராய் இப்படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நடிக்கவுள்ளாராம்.
ஏற்கனவே 2000 ஆம் ஆண்டு கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்தில் அஜித்துடன் நடித்தார் ஐஸ்வர்யா ராய். அதைத்தொடர்ந்து பல வருடங்கள் கழித்து மீண்டும் அஜித்துடன் இணைந்து நடிக்கவுள்ளார் ஐஸ்வர்யா ராய். ஆனால் இம்முறை அஜித்திற்கு ஜோடியாக நடிக்கின்றார். இதனைப்பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.