Skygain News

AK61 படத்தின் டைட்டில் இதுதான்..FIRST LOOK வெளியீடு தேதியும் அறிவிப்பு..!

அஜித் வலிமை படத்திற்கு பிறகு மீண்டும் வினோத்தின் இயக்கத்தில் AK61 படத்தில் நடித்து வருகின்றார். நேர்கொண்டப்பார்வை படத்தின் வெற்றிக்கு பிறகு இவர்கள் இணைந்த வலிமை திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. எனவே தற்போது உருவாகிவரும் AK61 படத்தை மிகப்பெரிய வெற்றிப்படமாக கொடுக்கும் முனைப்பில் அஜித் மற்றும் வினோத் இருக்கின்றனர்.

இந்நிலையில் இப்படத்தின் ஷூட்டிங்கே முடிய உள்ள நிலையிலும், ஏகே 61 படத்தின் அப்டேட் எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை. இடையிடையே இப்படம் குறித்து ஏதாவது சில தகவல்கள் லீக்காகும், அதன்படி கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இப்படத்திற்கு வல்லமை என பெயரிட உள்ளதாக கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது வேறு ஒரு டைட்டில் வைக்கப்பட்டு உள்ளதாக பேச்சு அடிபடுகிறது.

சமீபத்திய தகவல்படி ஏகே61 படத்துக்கு “துணிவே துணை” என பெயரிடப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் பர்ஸ்ட் லுக் போஸ்டருடன் டைட்டில் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடப்பட வாய்ப்புள்ளதாம். இதே தலைப்பில் ஜெய்சங்கர் நடித்த கிளாசிக் ஹிட் படம் ஒன்றும் உள்ளது. முன்னதாக கவுதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடித்த என்னை அறிந்தால் படத்துக்கு இந்த தலைப்பு வைக்க பரிசீலிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Share this post with your friends

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

என்னையும் அட்ஜஸ்ட்மெண்ட் பண்ண சொன்னாங்க! பிரபல நடிகரின் மகள் பேட்டி…

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற வரலட்சுமி சரத்குமார், திரைத்துறையில் நடிகைகளுக்கு கொடுக்கப்படும் பாலியல்...

Read More