திடீரென தஞ்சாவூரில் செய்தியாளர்களை சந்தித்த பழ.நெடுமாறன்,தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிருடன் உள்ளார் என்ற தகவலை அவரது குடும்பத்தினரின் அனுமதியுடன் உலகத் தமிழருக்கு அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் என்று சில தினங்களுக்கு முன்னர் தெரிவித்தார்.
இந்நிலையில் கவிஞர் காசி ஆனந்தன், பிரபாகரன் உயிருடன் இருப்பதாக நெடுமாறன் கூறியது முதல் கட்ட தகவல் மட்டும்தான். பிரபாகரன் உயிருடன் இருக்கும் படங்கள், அவரது குடும்பத்தினர் படங்கள், பிரபாகரனின் அறிக்கை எல்லாம் இனி வெளியாக இருக்கிறது. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் 30 குழுக்களாக இயங்குகின்றனர். இவர்களை ஒருங்கிணைந்து பிரம்மாண்டமான அரசியல் இயக்கத்தை பிரபாகரன் இனி வழிநடத்துவார் என பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
