ராணிப்பேட்டை முத்துக்கடை பேருந்து நிலையத்தில் அனைத்திந்திய EPS95 ஓய்வூதிய சங்கத்தினர் மற்றும் BHEL குழுவினருக்கான ஆதரவு போராட்டமானது நடைபெற்றது.
இந்த போராட்டத்தின் போது ஓய்வூதிய சங்கத்தினர் மத்திய அரசாங்கத்திடம் 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி முத்துக்கடை பேருந்து நிலையத்தில் கண்டன கோஷங்களை எழுப்பியவாறு போராட்டத்தை நடத்தினர்.

மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தின் போது ஓய்வூதிய சங்கத்தினருக்கு ரயில் பயணங்களில் நிறுத்தப்பட்டுள்ள சலுகையை மீண்டும் அம்பலப்படுத்த கோரியும் EPS95 பென்ஷனர்கள் சங்கத்தின் கோரிக்கையான குறைந்தபட்ச பென்ஷன் 9 ஆயிரம் ரூபாய் பஞ்சபடியுடன் வழங்கப்பட வேண்டும் என்றும் மருத்துவ காப்பீட்டு திட்டம் இ.எஸ்.ஐ உச்சநீதிமன்றத்தில் உள்ள அனைத்து வழக்குகளையும் வாபஸ் வழங்கப்பட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்திந்திய EPS95 ஓய்வூதிய சங்கம் மற்றும்
BHEL குழுவினர்கள் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மத்திய அரசை கண்டித்தவாறு கோஷங்களை எழுப்பினர்..