தமிழ் சினிமாவையும் தாண்டி இந்திய சினிமாவே வியந்து பார்க்கும் இயக்குனர்களில் ஒருவர் தான் மணிரத்னம். இவரின் இயக்கத்தில் நடிக்க பல முன்னணி நடிகர்களும் ஆவலாக இருக்கின்றனர். ஆனால் இவரின் இயக்கத்தில் நடிக்க வாய்ப்பு வந்தும் அதனை மறுத்துள்ளார் பிரபல நடிகை அமலாபால்.
மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் ‘பொன்னியின் செல்வன்’ படத்தை இந்திய சினிமாவே எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கிறது. எழுத்தாளர் கல்கி கிருஷ்ணமூர்த்தி எழுதிய புகழ்பெற்ற நாவலான ‘பொன்னியின் செல்வன்’ கதை அதே பெயரில் படமாக உருவாகி வெளியீட்டிற்கு தயாராக உள்ளது.

விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்ய லட்சுமி, த்ரிஷா, பிரபு, சரத்குமார், விக்ரம் பிரபு, கிஷோர், ஜெயராம், லால், ரகுமான் உள்ளிட்ட பல மொழிகளை சேர்ந்த பிரபல நட்சத்திரங்கள் நடித்துள்ள ‘பொன்னியன் செல்வன்’ படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பொன்னியின் செல்வனில் ஒரு முக்கிய ரோலில் நடிக்க அமலா பாலை அணுகி இருக்கிறார் மணிரத்னம். ஆனால் அவர் முடியாது என மறுத்துவிட்டாராம். அது பற்றி தற்போது ஒரு பேட்டியில் பேசி இருக்கிறார் அமலா பால்.

“நான் மணி சாரின் பெரிய ரசிகை. அவருடன் ஒரு ஆடிஷனுக்கு சென்று இருக்கிறேன், ஆனால் அந்த முறை நான் தேர்வாகவில்லை. அதற்கு பிறகு 2021ல் அதே ப்ரொஜெக்ட்டுக்கு என்னை அணுகினார்.”
“ஆனால் அதில் நடிக்க mental stateல் நான் இல்லை, அதனால் முடியாது என சொல்லவிட்டேன். அதற்காக இப்போது வருத்தப்படுகிறேனா என கேட்டால் ‘இல்லை’ என்று தான் சொல்வேன்” என அமலா பால் கூறி இருக்கிறார். இந்நிலையில் இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள இப்படத்தின் முதல் பாகம் செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது