Skygain News

வியற்பூட்டும் ரோஜா குல்கந்தின் நண்மைகள்..!

அதிக வெப்பத்தால் அவதி படுவோருக்கு அவர்களின் உடல் இதமாக வைத்துக்கொள்ள ரோஜா குல்கந்து முக்கிய பங்களிக்கிறது.
அமிலத்தன்மை, இரைப்பை ஒவ்வாமை, வயிற்றுப்போக்கு, அஜீரணம், முகப்பரு, தசைப்பிடிப்பு, உயர் இரத்த அழுத்தம், மன அழுத்தம் போன்ற பல நோய்களுக்கு சிறந்த மருந்தாக செயல்பட்டுவருகிறது.

பெண்களுக்கு அவர்களின் வாழ்வில் அதிக வலி தரக்கூடியதில் மாதவிடாய் முக்கிய பங்களிக்கிறது. இந்த மாதவிடாய் நேரங்களில் ரத்த போக்கு அதிகரிப்பதும், அடிவயிற்று வலி ஏற்படவும் செய்து அவர்களை நரக வேதனையடைய செய்கிறது. இத்தகைய காலங்களில் பெண்கள் காலையில் ரோஜா குல்கந்து சாப்பிட்டு வந்தால் மாதவிடாய் சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளும் சரியாகி அவர்களின் ஆரோக்கியம் சிறக்க வழி செய்கிறது.

மேலும் வயிற்றுப்போக்கு, வயிற்று புண்கள் மற்றும் இதர குடல் பிரச்சனைகள் நீங்க குல்கந்தை தினசரி ஒரு தேக்கரண்டி சாப்பிட்டு வந்தால் வயிற்றுப்போக்கு நின்று நமக்கு நல்ல நிவாரணம் உண்டாகும் . இது வயிற்றில் வெப்பத்தை குறைத்து, வயிற்றுப்புண், குடல்புண்கள் மற்றும் வயிறு வீக்கம் குறைத்து நம்மை காக்கிறது .

சிலருக்கு இதய சம்பந்தமான நோய்கள் ஏற்பட்டு தொல்லை தரும் ,இந்நேரத்தில் ரோஜா குல்கந்து சாப்பிடும் நபர்களுக்கு ரத்த அழுத்தம் வெகுவாக குறைந்து, இதயம் சம்பந்தமான நோய்கள், பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்கிறது.மேலும் நரம்பு தளர்ச்சி நோய்க்கும் இது சிறந்த மருந்து ஆகும்.

Share this post with your friends

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

என்னையும் அட்ஜஸ்ட்மெண்ட் பண்ண சொன்னாங்க! பிரபல நடிகரின் மகள் பேட்டி…

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற வரலட்சுமி சரத்குமார், திரைத்துறையில் நடிகைகளுக்கு கொடுக்கப்படும் பாலியல்...

Read More