ரியல்மி நிறுவனம் முற்றிலும் புதிய ரியல்மி 10 ஸ்மார்ட்போனினை சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. இதில் 6.4 இன்ச் FHD+ 90Hz சூப்பர் AMOLED ஸ்கிரீன், மீடியாடெக் ஹீலியோ ஜி99 பிராசஸர், அதிகபட்சம் 8 ஜிபி ரேம், 8 ஜிபி விர்ச்சுவல் ரேம், ஆண்ட்ராய்டு 12 மற்றும் ரியல்மி யுஐ 3.0 ஒஎஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, 2MP போர்டிரெயிட் கேமரா, 16MP செல்பி கேமரா, பக்கவாட்டில் கைரேகை சென்சார், 5000 எம்ஏஹெச் பேட்டரி, 33 வாட் சூப்பர்வூக் பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு உள்ளது.

ரியல்மி 10 அம்சங்கள்:
6.4 இன்ச் 2400×1080 பிக்சல் FHD+ AMOLED ஸ்கிரீன், 90Hz ரிப்ரெஷ் ரேட் ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி99 பிராசஸர் Arm Mali -G57 MC2 4 ஜிபி , 8 ஜிபி ரேம் 128 ஜிபி, 256 ஜிபி மெமரி மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி டூயல் சிம் ஸ்லாட் ஆண்ட்ராய்டு 12 மற்றும் ரியல்மி யுஐ 3.0 50MP பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ் 2MP போர்டிரெயிட் கேமரா 16MP செல்பி கேமரா பக்கவாட்டில் கைரேகை சென்சார் 3.5mm ஆடியோ ஜாக், ஹை-ரெஸ் ஆடியோ டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.3 யுஎஸ்பி டைப் சி போர்ட் 5000 எம்ஏஹெச் பேட்டரி 33 வாட் சூப்பர்வூக் பாஸ்ட் சார்ஜிங்

விலை மற்றும் விற்பனை விவரங்கள்:
ரியல்மி 10 ஸ்மார்ட்போன் கிளாஷ் வைட் மற்றும் ரஷ் பிளாக் என இரண்டு விதமான நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை 179 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 14 ஆயிரத்து 550 என துவங்குகிறது. இதன் டாப் எண்ட் மாடல் விலை 204 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 16 ஆயிரத்து 630 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.