காஞ்சிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் முதியவர் பன்னீர்செல்வம் வயது 65. இவர் தனது இருசக்கர வாகனத்தில் காமராஜர் வீதியில் சென்று கொண்டிருந்த பொழுது காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திலிருந்து தாம்பரம் நோக்கிச் சென்ற அரசு பேருந்து ரயில்வே சாலை வழியாக செல்லமால் காமராஜ் வீதி வழியாக போக்குவரத்து விதிகளை மீறி வழி மாறி வந்ததால்,பேருந்தின் முன்னே பன்னீர்செல்வம் ஓட்டிச் சென்ற இரு சக்கர வாகனத்தின் மீது உரசியதில் பன்னீர்செல்வம் நிலை தடுமாறி சாலையில் விழுந்துள்ளார்.அப்போது முதியவர் பன்னீர் செல்வத்தின் மீது அரசு பேருந்தின் பின் பக்க சக்கரம் ஏறியதில் அவர் சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த விஷ்ணு காஞ்சி போலீசார் மற்றும் போக்குவரத்து போலீசார் உயிரிழந்த முதியவர் பன்னீர்செல்வத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து அரசு பேருந்தினை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் இருசக்கர வாகனத்தில் சென்ற முதியவர் அரசு பேருந்தின் பின் சக்கரம் ஏறி இறங்கி பரிதாபமாக பலியான நெஞ்சை பதைபதைக்கும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.