தூத்துக்குடி, கே.வி.கே.நகர், நான்காம் கேட் அருகே தேங்கிய மழை நீர் குட்டையில் 60வயது மதிக்கத்தக்க முதியவர் இறந்துகிடப்பதாக பொதுமக்கள் மத்திய பாகம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து, ஆய்வாளர் ஐயப்பன் உத்தரவின் பேரில் துணை ஆய்வாளர் முருகபெருமாள் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று குட்டையில் சடலமாக மிதந்த முதியவரின் உடலை மீட்டு உடற்கூராய்விற்காக தூத்துக்குடி அரசு மருத்துவமணைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனையடுத்து, அந்த முதியவர் குடியோதையில் குட்டையில் விழுந்தாரா? அல்லது தற்கொலை செய்து செய்து கொண்டாரா?அல்லது யாரேனும் கொலை செய்து குட்டையில் வீசினரா? எஎன்கிற கோணத்தில் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.