வம்சி பைடிபல்லி இயக்கத்தில் விஜய், ரஷ்மிகா மந்தனா உள்ளிட்டோர் நடித்து வரும் வாரிசு படத்தின் கிளைமாக்ஸ் சென்னையில் இருக்கும் ஈவிபி ஃபிலிம் சிட்டியில் படமாக்கப்பட்டு வருகிறது. பிரமாண்டமாக செட் போட்டு காட்சிகளை ஷூட் செய்து வருகிறார்கள். கிளைமாக்ஸ் காட்சியில் நூற்றுக்கணக்கான மாடுகள், 5 யானைகளை பயன்படுத்தியிருக்கிறார்கள்.
உரிய அனுமதி பெறாமல் விலங்குகளை வைத்து ஷூட்டிங் நடத்தியதாக புகார் எழுந்தது. இந்நிலையில் விலங்குகள் நலவாரியத்தின் கவனத்திற்கு இந்த விவகாரம் சென்று பிரச்சனை பெரிதாகிவிட்டது.
Animal Welfare board issues notice to #Varisu for not obtaining proper permissions to shoot with Elephants in the film. pic.twitter.com/9IGeCK5ym9
— LetsCinema (@letscinema) November 24, 2022
இதை தொடர்ந்து இந்திய விலங்குகள் நல வாரியம் தயாரிப்பு நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். இது குறித்து ஏழு நாட்களுக்குள் பதிலளிக்க வேண்டுமென உத்தரவு.