ரஜினி தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க சன் பிக்சர்ஸ் இப்படத்தை தயாரித்து வருகின்றது. கடந்த ஆகஸ்ட் மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கப்பட்டதை அடுத்து தொடர்ந்து விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.
மேலும் இப்படத்தில் ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, வசந்த் ரவி, ஷிவ்ராஜ்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.இந்நிலையில் ரஜினியின் பாபா திரைப்படம் ரீரிலீஸ் செய்யப்பட இருப்பதாக தகவல்கள் வந்துள்ளது. ரஜினியின் கதை மற்றும் திரைக்கதையில் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் வெளியான திரைப்படம் தான் பாபா.
இப்படத்தை ரஜினியே தயாரித்திருந்தார். மிகப்பெரிய எதிர்பார்ப்பில் கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியான பாபா திரைப்படம் தோல்வியை சந்தித்தது. இதையடுத்து தற்போது 20 வருடங்கள் கழித்து பாபா திரைப்படம் திரையில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் போஸ்டர் ஒன்றில் அனிருத் இடம்பெற்றிருப்பது தற்போது தெரியவந்துள்ளது.
#Anirudh ❤️❤️🤣cute @anirudhofficial pic.twitter.com/kcJQzpXjTd
— Revanth.K (@Revanth_K1) November 21, 2022
சிறுவனாக இருக்கும் அனிருத் பாபா கெட்டப்பில் அந்த போஸ்டரில் இருக்கின்றார். தற்போது அந்த போஸ்டர் இணையத்தில் செம வைரலாகி வருகின்றது குறிப்பிடத்தக்கது