பொறியியல் படிப்புகளுக்கான புதிய பாடத்திட்டத்தை மாற்றுவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. 20 ஆண்டுகளுக்குப் பிறகு பொறியியல் பாடத்திட்டம் மாற்றப்படுவதாகவும், இதன் மூலம் வேலைவாய்ப்பு, தனித்திறன் ஆகியவை ஊக்கப்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொழில் தேவைக்கேற்ப மாணவர்களை தயார்படுத்தல், ஆராய்ச்சி மேற்கொள்ள ஊக்குவித்தல் , சராசரி மாணவர்களின் தனித்திறனை வெளிகொணர்தல், தொழில் முனைவோராக உருவாக்குதல் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு பாடத்திட்டம் மாற்றப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் பொறியியல் மாணவர்களின் திறன்களை மேம்படுத்துவதற்கான புதிய பாடத்திட்டத்தை நடப்பு கல்வியாண்டிலேயே அமல்படுத்தி அண்ணா பல்கலைக்கழகம் அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் 3 செமஸ்டர்களுக்கு, தமிழர் மரபு, அறிவியல் தமிழ், தொழில்முறை வளர்ச்சி , English Lab, Communication lab அல்லது Foreign Language ஆகிய 5 புதிய பாடங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 2ம் ஆண்டு மாணவர்களுக்கான பாடத்திட்டம் வெளியிடப்பட்டுள்ளது.