இயக்குனர் செல்வராகவன் நடிப்பு உலகிற்கு அடியெடுத்து வைக்கும் ‘ பகாசுரன் ‘ படத்தின் மூலம் பிப்ரவரி 17ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது. மோகன் ஜி இயக்கத்தில் டிஓபி நடராஜ், ராதாரவி, ராஜன், ராம்ஸ், சரவணன் சுப்பையா உள்ளிட்ட திறமையான நடிகர்கள் நடித்துள்ள படம். இந்நிலையில் பகாசூரன் வெற்றியடைய பாஜக தலைவர் அண்ணாமலை வாழ்த்து கூறியுள்ளார். அவரது டுவீட்டில் ‘பகாசுரன் படம் மாபெரும் வெற்றி படமாக அமைய வேண்டும் என்று தனது வாழ்த்துக்களை பட குழுவினருக்கும் இயக்குனர் மோகன் ஜிக்கும் தெரிவித்துக் கொள்கிறேன்’ என குறிப்பிட்டு இருந்தார்.
